ரகசிய ராணுவ ஆபரேஷனை இந்தியா மேற்கொள்ளலாம் : இம்ரான்கான் புலம்பல் 

காஷ்மீர் விவகாரத்தை திசைதிருப்ப ரகசிய ராணுவ ஆபரேஷனை இந்தியா மேற்கொள்ளலாம்: என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
ரகசிய ராணுவ ஆபரேஷனை இந்தியா மேற்கொள்ளலாம் : இம்ரான்கான் புலம்பல் 

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தை திசைதிருப்ப ரகசிய ராணுவ ஆபரேஷனை இந்தியா மேற்கொள்ளலாம்: என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

அரசியல் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீருக்கு  வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் ரத்து செய்த இந்தியா, அத்துடன் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது.

இதுதொடர்பாக கடும் அதிருப்தியை தெரிவித்த பாகிஸ்தான் இந்த பிரச்சினையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக செய்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை. அதேசமயம் இந்தியாவுடனான பிரச்சினையை பாகிஸ்தான் பேச்சு வார்த்தையின் மூலமாக மட்டுமே சுமுகமாகத் தீர்க்க வேண்டும் என்று பல்வேறு உலக நாடுகள் உறுதியாகி வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தை திசைதிருப்ப ரகசிய ராணுவ ஆபரேஷனை இந்தியா மேற்கொள்ளலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

காஷ்மீரில் நடத்தப்பட்டு வரும் மனித உரிமைமீறல்கள் மீதான கவனத்தை திசை திருப்பவும், இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வன்முறையை கட்டவிழ்த்து விடவும், ஒரு ரகசிய ராணுவ ஆபரேஷனை இந்தியா மேற்கொள்ளலாம் என்று சர்வதேச சமூகத்தை எச்சரிக்கிறேன்.

ஆப்கானிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள்ளும் (ஜம்மு காஷ்மீர்), மற்றவர்கள் தெற்கிலும் ஊடுருவியுள்ளதாக இந்திய ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியாகியுள்ளதாக கேள்விபட்டோம். இவை அனைத்துமே ஜம்மு காஷ்மீரில் இந்தியா நிகழ்த்தி வரும் சுத்திகரிப்பு மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகளில் இருந்து கவனத்தை மாற்றுவதற்காகத்தான் என்பதை எளிதில் ஊகிக்க முடியும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com