சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறை: பாக்., சீனாவுக்கு ஐ.நா. கண்டனம்

சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறை உள்ளிட்டவை தொடர்பாக பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறை: பாக்., சீனாவுக்கு ஐ.நா. கண்டனம்

சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறை உள்ளிட்டவை தொடர்பாக பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிறுபான்மையினர் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா. பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் இவ்விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் மற்றும் சீனா மீதான தங்களின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. 

அதில், பாகிஸ்தான் தங்கள் நாட்டில் வசிக்கும் கிறிஸ்துவர்கள், அஹமதியர்கள், ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மதங்களுக்கு எதிராகவும், சீனா தங்கள் நாட்டில் வசிக்கும் உய்கர் போன்ற சிறுபான்மையின மதங்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளன.

இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் குழுத் தலைவர் நவீத் வால்டர் பேசியதாவது, தங்கள் சொந்தப் பகுதிகளிலேயே பெரும்பான்மையான மக்கள் ஒதுக்கப்படும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக மதம் சார்ந்த சிறுபான்மையினர் புறக்கணிப்பு பாகிஸ்தானிலும், சீனாவிலும் அதிகப்படியாக நடைபெறுகிறது. அந்நாடுகள் தங்களின் தேசப் பாதுகாப்பு நடவடிக்கை எனும் பெயரில் சிறுபான்மையின மக்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறையை ஏவுகிறது. இதனால் பாகிஸ்தான் மற்றும் சீனாவைச் சேர்ந்த சிறுபான்மையினரின் சுதந்திரமும், உரிமையும் பறிக்கப்படுகிறது என்று விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தானில் வசிக்கும் ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், அஹமதியர்கள் மற்றும் ஷியாக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மதத்தினருக்கு எதிராக வன்முறைகள், கொலைகள், கடத்தல், பாலியல் வன்கொடுமை, கட்டாய மதமாற்றம் உள்ளிட்டவை அதிகம் நிலவுவதாக ஐ.நா.வில் உலக நாடுகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com