காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது: பாக்., அதிபர்

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம், இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது என்று பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம், இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது என்று பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் வெளிப்பாடாக, இந்தியாவுடனான தூதரக உறவு, வர்த்தக உறவு, போக்குவரத்துச் சேவை உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் நிறுத்திக்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரை சென்ற இவ்விவகாரத்தை, அடுத்தபடியாக சர்வதேச நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்ல பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி இதுகுறித்து தெரிவித்துள்ள கருத்து பாகிஸ்தானின் 'டான்' பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதன்படி,   

"சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததன் மூலம் காஷ்மீரின் நிலைமை மேம்படும் என்று நினைப்பதன் மூலம், இந்திய அரசு முட்டாள்களின் பிரதேசத்தில் வாழ்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளதன் மூலம் இந்தியா பயங்கரவாதத்தை ஊக்குவித்துள்ளது. அதற்கு பாகிஸ்தான் பொறுப்பல்ல.    

இவ்விவகாரத்தில், காஷ்மீரைக் கைப்பற்றுவதற்கான நோக்கம் உள்ளது என்று நினைக்கிறேன். ஆனால், அது நடக்காது. காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் தொடர்ந்து சர்வதேச மன்றங்களில் எழுப்பும். இந்தியா வேண்டுமென்றால், புல்வாமா போன்ற ஆப்ரேஷனை நடத்தி, அதன்பிறகு பாகிஸ்தானை தாக்கலாம். ஆனால், எங்களுக்கு போர் தொடுக்க விருப்பமில்லை. அதேசமயம், இந்தியா போர் தொடுத்தால், எங்களைப் பாதுகாத்துக் கொள்வது எங்களது உரிமையாகும். 

இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது. அந்த நெருப்பு இந்தியாவின் மதச்சார்பின்மையையும் எரிக்கும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com