சிறுபான்மையினர் மீது அடக்குமுறை: ஐ.நா.வில் சீனா, பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு

சீனாவிலும், பாகிஸ்தானிலும் சிறுபான்மை மதத்தினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
சிறுபான்மையினர் மீது அடக்குமுறை: ஐ.நா.வில் சீனா, பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு


சீனாவிலும், பாகிஸ்தானிலும் சிறுபான்மை மதத்தினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
போரில் சிறுபான்மை மதத்தினரின் பாதுகாப்பு மேம்பாடு என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
போலந்து ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான மதச் சிறுபான்மையினர் பிரிவு தூதர் சாமுவேல் பிரவுன்பேக், ஒரு நாட்டுக்கு உள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும் அமைதி நிலவ வேண்டுமென்றால், அங்கு சிறுபான்மையினர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
ஆனால், பாகிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்குத் தொடர்பில்லாதவர்கள் மூலமாகவோ, அல்லது அரசின் பாகுபாட்டுச் சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலமாகவோ சிறுபான்மையினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது.
சீனாவைப் போல், தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி சிறுபான்மையினரின் மத உரிமையைப் பறிக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார் அவர்.
மேலும், சீனா மற்றும் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் மத உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து மத உரிமைக்கான பிரிட்டன் தூதர் தாரிக் அகமது, கனடா தூதர் மார்க்-ஆண்டர் பிளஞ்சார்ட் உள்ளிட்டோரும் கவலைதெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com