இந்தியா போரைத் தொடங்கினால்..?:   பாகிஸ்தான் அதிபர் எச்சரிக்கை 

இந்தியா போரைத் தொடங்கினால் பாகிஸ்தான் என்ன செய்யும் என்பது குறித்து அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி  எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா போரைத் தொடங்கினால்..?:   பாகிஸ்தான் அதிபர் எச்சரிக்கை 

இஸ்லாமாபாத்: இந்தியா போரைத் தொடங்கினால் பாகிஸ்தான் என்ன செய்யும் என்பது குறித்து அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை நீக்கி விட்டதனால் அங்கு நிலைமை மேம்படும் என்று இந்தியா நினைக்குமானால்,  இந்திய அரசாங்கம் முட்டாள்களின் சொர்க்கத்தில் வசித்து வருகிறது என்றுதான் அர்த்தம்.

இந்த நடவடிக்கைகளின் காரணமாக இந்தியா உண்மையில் அங்கு பயங்கரவாதத்தினைத்தான்  ஊக்குவித்துள்ளது.  இந்த விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடி வருகிறது.

இந்தியாவின் நடவடிக்கைகளின் காரணமாக நீண்ட காலத்திற்கு பின் இந்த விவகாரம் சர்வதேச சமூகத்திற்குச் சென்றுள்ளது. காஷ்மீர் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலின் எண்ணற்ற தீர்மானங்களை இந்தியா தவிர்த்து விட்டது. பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரம் தீர்ப்பதற்கான வாய்ப்புகளையும் இந்தியா மறுத்து விட்டது.

பாகிஸ்தானுக்கு எதிராக புல்வாமா போன்ற தாக்குதல்களை இந்தியா மீண்டும் நடத்தக்கூடிய சாத்தியம் உள்ளது.  ஆனால் போரை தொடங்க பாகிஸ்தான் விரும்பவில்லை.  ஒருவேளை இந்தியா போரைத் தொடங்கினால், எங்களை தற்காத்து கொள்வதென்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்குத் தெரியும்; அது எங்களது உரிமை.

 இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com