காஷ்மீர் குறித்து அவதூறு பதிவு: பாக். அதிபருக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ்

ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் சூழல் குறித்து அவதூறு விடியோ பதிவிட்டதற்காக பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்விக்கு டுவிட்டர் (சுட்டுரை) நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காஷ்மீர் குறித்து அவதூறு பதிவு: பாக். அதிபருக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ்


ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் சூழல் குறித்து அவதூறு விடியோ பதிவிட்டதற்காக பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்விக்கு டுவிட்டர் (சுட்டுரை) நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 
ஜம்மு-காஷ்மீர் குறித்து எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. எனினும், இதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் முறையிட்டபோதும், இந்த விவகாரத்தில் தலையிட அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மறுத்துவிட்டன.
இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிராக காஷ்மீரில் போராட்டம் நடைபெறுவது போன்ற விடியோவை, பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி தனது சுட்டுரைப் பக்கத்தில் அண்மையில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாக அவருக்கு சுட்டுரை நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸை சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்த அந்நாட்டின் மனித உரிமைகள் அமைச்சர் சிரீன் மஸாரி, சுட்டுரை நிறுவனத்தின் நோட்டீஸ் தவறான எடுத்துக்காட்டாகவும், கேலிக்குறியதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மூரத் சயீது கூறுகையில், காஷ்மீர் குறித்து நான் பதிவிட்ட கருத்து, இந்திய அரசின் விதிகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி சுட்டுரை நிறுவனம் எனக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்றார்.
காஷ்மீருக்கு ஆதரவாகப் பதிவிட்டவர்களின் சுட்டுரைக் கணக்குகளை நீக்கியது தொடர்பாக அந்நிறுவனத்திடம் முறையிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஒருவர் கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com