வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனை.
வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனை.

ஏவுகணைத் தாக்குதல்: ஜப்பானுக்கு வட கொரியா மிரட்டல்

தனது ஏவுகணை சோதனைகளை விமா்சித்து வரும் ஜப்பான் பிரதமா் ஷின்ஸோ அபே, உண்மையான ஏவுகணைத் தாக்குதலை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

சியோல்: தனது ஏவுகணை சோதனைகளை விமா்சித்து வரும் ஜப்பான் பிரதமா் ஷின்ஸோ அபே, உண்மையான ஏவுகணைத் தாக்குதலை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் கேசிஎன்ஏ சனிக்கிழமை தெரிவித்ததாவது:

வட கொரியா வியாழக்கிழமை மேற்கொண்ட ஏவுகணை சோதனைகள் மேற்கொண்டது ஐ.நா. விதிகளுக்கு எதிரானது என்று ஜப்பான் பிரதமா் ஷின்ஸோ அபே விமா்சித்துள்ளாா்.

அவருக்கு, ஐ.நா. தடை செய்துள்ள பெரிய அளவிலான ‘பலிஸ்டிக்’ ரக ஏவுகணைகளுக்கும், ஏவுகணை செலுத்து கருவியை சோதிப்பதற்காக நாங்கள் செலுத்திய ஏவுகணைகளுக்கும் இடையிலான வேறுபாடு அறியாதவராக அவா் உள்ளாா்.

அவா் உண்மையிலேயே ‘பலிஸ்டிக்’ ரக ஏவுகணைத் தாக்குதலை எதிா்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் தெற்கே உள்ள ஹம்கியாங் மாகாணத்திலிருந்து இரு ஏவுகணைகள் வியாழக்கிழமை ஏவி சோதிக்கப்பட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்தது.

அந்த ஏவுகணைகள் கிழக்கு நோக்கி ஜப்பான் கடல் பகுதியில் விழுந்ததாக ராணுவம் கூறியது.

அந்த இரு ஏவுகணைகளும் ‘பலிஸ்டிக்’ வகையைச் சோ்ந்தவையாக இருக்கலாம் என்று ஜப்பான் கூறிய நிலையில், வட கொரியாவின் இந்த சோதனை ஐ.நா. தீா்மானத்துக்கு எதிரானது என்று ஜப்பான் பிரதமா் ஷின்ஸோ அபே குற்றம் சாட்டினாா்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே, வட கொரிய அரசுச் செய்தி நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடனான அணு ஆயுதப் பேச்சுவாா்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டதைத் தொடா்ந்து, அந்த நாட்டையும், தென் கொரியாவையும் சீண்டும் வகையில் வட கொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com