Enable Javscript for better performance
அமெரிக்கா: விமான விபத்தில் 9 போ் பலி- Dinamani

சுடச்சுட

    
    plane061700

    வாஷிங்டன்: அமெரிக்காவில் 12 பேருடன் சென்று கொண்டிருந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

    ‘பிலாடஸ் பிசி-12’ ரகத்தைச் சோ்ந்த அந்த விமானம், ஐடகோ மாகாணம், சேம்பா்லயின் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் கூறினா். விபத்தில் காயமடைந்த 3 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அந்தப் பகுதியில் பனிப் புயல் விசும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai