சீனாவின் யாங்ச்சி ஆற்று கழிமுகப் பகுதியின் ஒருமைப்பாட்டு வளர்ச்சித் திட்டம்!

சீனாவின் யாங்ச்சி ஆற்று கழிமுகப் பகுதியின் ஒருமைப்பாட்டு வளர்ச்சித் திட்டத்தைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டியும், சீன அரசவையும் டிசம்பர் முதல் நாள் வெளியிட்டன. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


சீனாவின் யாங்ச்சி ஆற்று கழிமுகப் பகுதியின் ஒருமைப்பாட்டு வளர்ச்சித் திட்டத்தைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டியும், சீன அரசவையும் டிசம்பர் முதல் நாள் வெளியிட்டன.

இத்திட்டத்தின் மூலம், 2025ஆம் ஆண்டுக்குள், இவ்வளர்ச்சி சாராம்ச ரீதியான முன்னேற்றத்தைப் பெறும். மேலும், அறிவியல் புத்தாக்கம், உள்கட்டமைப்பு, உயிரினச் சுற்றுச்சூழல், பொதுச் சேவை உள்ளிட்ட துறைகள், ஒருங்கிணைந்த வளர்ச்சியடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, 2025ஆம் ஆண்டுக்குள், சீன மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், அறிவியல் புத்தாக்கத் துறையின் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டின் விகிதம் 3 விழுக்காட்டைத் தாண்டும். மேலும், உயர் தொழில் நுட்பத் துறையின் உற்பத்தி மதிப்பு, ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் துறையின் மொத்த உற்பத்தி மதிப்பில் 18 விழுக்காட்டு வகிக்கும் என்றும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com