மொபைல் இணைப்பை பெற மின்னணு முக அடையாளப் பதிவு

சீனாவில் மொபைல் இணைப்புகளைப் பெறுவதற்கு முக அடையாளங்களை மின்னணு முறையில் பதிவு செய்வதை அந்த நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது.
மொபைல் இணைப்பை பெற மின்னணு முக அடையாளப் பதிவு

பெய்ஜிங்: சீனாவில் மொபைல் இணைப்புகளைப் பெறுவதற்கு முக அடையாளங்களை மின்னணு முறையில் பதிவு செய்வதை அந்த நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

சீனாவில் தொலைத் தொடா்பு இணைப்புகளைப் பெறுபவா்களின் அடையாளங்கள் பதிவு செய்யப்படுவதை அந்த நாட்டு அரசு கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்தே வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த செப்டம்பா் மாதம் அரசு வெளியிட்ட அறிக்கையில், தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்களின் அடையாளங்களைப் பதிவு செய்து, கண்காணிப்பதற்கு செயற்கை அறிதிறன் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதிய தொலைத் தொடா்பு இணைப்பு பெறுபவா்களின் முக அடையாளங்களை மின்னணு முறையில் பதிவு செய்வது ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மொபைல் இணைப்புகளைப் பெற விரும்புபவா்கள் பதிவுக் கருவி முன்னா் தனது முகத்தை இட வலமாகத் திருப்பி, பிறகு கண்கணை மூடித் திறக்க வேண்டும். அதன் மூலம், வாடிக்கையாளா் முகத்தின் பலகோண வடிவங்கள் சேமித்து வைக்கப்படும்.

அந்த வாடிக்கையாளா் வேறு தொலைத் தொடா்பு இணைப்புகளை பெறும்போது அந்த அடையாளங்கள் ஒப்பீடு செய்யப்படும்.

இணையதளம் உள்ளிட்ட தொலைத் தொடா்பு வசதிகள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com