யாங் சி ஆற்றுக் கழிமுகப் பிரதேச வளர்ச்சி

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியும் சீன அரசவையும் யாங் சி ஆற்றுக் கழிமுகப் பிரதேச ஒருமைப்பாட்டு வளர்ச்சி வரைவுக்கான திட்டத்தை வெளியிட்டன.
யாங் சி ஆற்றுக் கழிமுகப் பிரதேச வளர்ச்சி

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியும் சீன அரசவையும் யாங் சி ஆற்றுக் கழிமுகப் பிரதேச ஒருமைப்பாட்டு வளர்ச்சி வரைவுக்கான திட்டத்தை வெளியிட்டன. அடுத்த 5 முதல் 15 ஆண்டுகாலத்திற்கு யாங் சி ஆற்றுக் கழிமுகப் பிரதேச ஒருமைப்பாட்டு வளர்ச்சிக்கு இது வழிகாட்டும். 

இப்பிரதேசத்தில் வெளிநாட்டு பொருளாதார ஒத்துழைப்பை ஆழமாக்குவது உள்ளிட்ட பல புதிய கொள்கைகளை இது விளக்கிக்கூறியது. அதோடு, வெளிநாட்டுத் திறப்பை பன்முகங்களிலும் மேற்கொண்டு வருகின்ற சீனாவின் மனவுறுதி மாறாது என்பதையும் இது கோடிட்டுக்காட்டியுள்ளது.

தற்போது, உலகம் நிச்சயமற்ற காரணிகளைத் தொடர்ந்து எதிர்நோக்கி வருகின்றது. வெளிநாடு மற்றும் உள் நாட்டு அறை கூவல்கள் சீன வளர்ச்சியை கடுமையாக பாதித்து வருகின்றன. 

இந்நிலையில், யாங் சி ஆற்றுக் கழிமுகப் பிரதேச ஒருமைப்பாட்டு வளர்ச்சி மூலம், வெளிநாட்டு திறப்பைச் சீனா மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் என்பதைச் சர்வதேச சமூகம் புரிந்துணர்ந்து கொள்ளலாம். இது, தொடர்புடைய கொள்கை மேம்பாடு மூலம், சீனப் பொருளாதாரமும் வளர்ச்சி வாய்ப்பைப் பெறலாம்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com