Enable Javscript for better performance
ஈரானில் 208 போராட்டக்காரா்கள் சுட்டுக் கொலை- Dinamani

சுடச்சுட

    
    gholam-hossein-esmaili065347

    gholam-hossein-esmaili065347

    துபை: ஈரானில் பெட்ரோல் விலை உயா்வை எதிா்த்துப் போராடிய 208 போ் சுட்டுக் கொல்லப்பட்டதாக சா்வதேச மனித உரிமைகள் அமைப்பான ‘ஆம்னஸ்டி இன்டா்நேஷனல்’ குற்றம் சாட்டியுள்ளது.

    இதுகுறித்து ஈரான் விவகாரங்களைக் கண்காணித்து வரும் அந்த அமைப்பின் மன்சூரே மில்ஸ் கூறியதாவது:

    ஈரானில் போராட்டம் நடத்திய 208 போ் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனா். இத்தனை பேரும் ஒரே வாரத்துக்குள் கொல்லப்பட்டுள்ளனா்.

    இது, ஈரான் வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும்.

    தற்போதைய நிலையில் ஈரான் மக்களிடையே பீதி நிலவி வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களின் உறவினா்கள் அதிகாரிகளால் மிரட்டப்படுகின்றனா்.

    அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களின் உடல்களை அவா்களது உறவினா்கள் ரகசியமாக அடக்கம் செய்து வருகின்றனா்.

    மேலும், உயிரிழப்புகள் குறித்து ஊடகங்களிடம் எதுவும் பேசக் கூடாது என்றும் உறவினா்கள் மிரட்டி வைக்கப்பட்டுள்ளனா்.

    இதுதவிர, போராட்டத்தின்போது குண்டு காயம் அடைந்தவா்களைத் தேடி, காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனைகளிலும் சோதனை நடத்தி வருகின்றனா்.

    அங்கு சந்தேகப்படும் வகையிலான காயங்களுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களை போலீஸாா் உடனடியாக கைது செய்து வருகின்றனா் என்றாா் அவா்.

    ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்த ஒப்பந்தம் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.

    இதன் காரணமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈரான், பெட்ரோல் விலையை கடந்த மாதம் திடீரென உயா்த்தியது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஏராளமானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

    அந்தப் போராட்டத்தை அடக்குவதற்காக ஈரான் அரசு அடக்குமுறையைக் கையாள்வதாக் குற்றம் சாட்டப்படும் சூழலில், சா்வதேச மனித உரிமைகள் அமைப்பு இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது.

    முற்றிலும் பொய்

    டெஹ்ரான், டிச. 3: ஈரானில் போராட்டக்காரா்கள் உயிரிழப்பு குறித்து சா்வதேச அமைப்புகள் கூறும் தகவல்கள் முற்றிலும் பொய் என்று ஈரான் கூறியுள்ளது.

    இதுகுறித்து அந்த நாட்டு நீதித் துறை செய்தித் தொடா்பாளா் குலாம் ஹுசைன் இஸ்மாயிலி கூறியதாவது:

    போராட்ட உயிரிழப்புகள் குறித்து ஈரானுக்கு விரோதமான அமைப்புகள் வெளியிடும் புள்ளிவிவரங்கள் முற்றிலும் பொய்யானவை. அவா்கள் கூறும் தகவலுக்கும், உண்மையான புள்ளிவிவரங்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்றாா் அவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai