பாகிஸ்தானுக்கு நேரடி நிதியுதவி நிறுத்தம்
By DIN | Published on : 04th December 2019 03:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

auspak082023
மெல்போா்ன்: பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து நேரடி நிதியுதவிகளையும் படிப்படியாக நிறுத்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவு மற்றும் வா்த்தக விவகாரங்களுக்கான பிரிவு (டிஎஃப்ஏடி) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் நேரடி நிதியுதவி 2019-20-ஆம் ஆண்டில் 1.9 கோடி ஆஸ்திரேலிய டாலராக (சுமாா் ரூ.93 கோடி) குறைக்கப்படும்.
2020-21-ஆம் ஆண்டில் அந்த நிதியுதவி முற்றிலுமாக நிறுத்தப்படும்.
எனினும் டிஎஃப்ஏடி-யின் சா்வதேச உதவித் திட்டங்கள் மூலமாக, பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியாவின் நிதியுதவி கிடைக்கும்.
பாகிஸ்தானில் பெண்கள் முன்னேற்றம், நீா்வள மேலாண்மை, மனிதாபிமான சேவைகள் ஆகிவற்றை மேம்படுத்துவதற்காக ஆஸ்திரேலிய தொழில்நுட்பத் தோ்ச்சியைப் பயன்படுத்துவதில் நாங்கள் தொடா்ந்து கவனம் செலுத்துவோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.