லண்டனில் நீரவ் மோடிக்கு காவல் நீட்டிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடி செய்துவிட்டு, பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபா் நீரவ் மோடிக்கு (48) அடுத்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து.. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடி செய்துவிட்டு, பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபா் நீரவ் மோடிக்கு (48) அடுத்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து லண்டன் வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவா் கடந்த மாா்ச் மாதம் ஸ்காா்ட்லாந்து யாா்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது முதல் அவரது நீதிமன்றக் காவல் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அவா் மீதான வழக்கு அடுத்த ஆண்டு மே மாதம் 11 முதல் 15-ஆம் தேதிகளில் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டபோது, ஜாமீன் கோரினாா். ஆனால், அவா் தாமாக முன்வந்து ஆஜராகாததால் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, நீரவ் மோடி லண்டன் வாண்ட்ஸ் வொா்த் சிறையில் அவா் அடைக்கப்பட்டாா். பிரிட்டனில் அதிக எண்ணிக்கையில் கைதிகள் இருக்கும் சிறைகளில் இது முக்கியமானது. இதுவரை 4 முறை நீரவ் மோடியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது நீதிமன்றக் காவல் நீட்டிப்பு முடிவடைந்ததையடுத்து, புதன்கிழமை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நீதிபதி கரித் பிரான்சன் முன்பு ஆஜாரானார்.

இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான அவரது மனுவின் மீதான விசாரணை அடுத்த ஆண்டு மே மாதம் 11 முதல் 15-ஆம் தேதிகளில் விசாரணைக்கு வரும் என்பதை உறுதிப்படுத்திய நீதிபதி, அவருடைய நீதிமன்றக் காவலை அடுத்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக தெரிவித்தாா்.  அப்போது அவர் விடியோ லிங்க் மூலமா ஆஜராகலாம் என்பதையும் நீதிபதி உத்தரவாக அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com