சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரச்னையில் அமெரிக்கா தலையிடக் கூடாது!

டிசம்பர் 3ஆம் நாள், அமெரிக்க பிரதிநிதிகள் அவை, கூறப்படும் 2019 உய்கூர் மனித உரிமை சட்ட வரைவை அங்கீகரித்து, சீன அரசின் கொள்கையின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரச்னையில் அமெரிக்கா தலையிடக் கூடாது!


டிசம்பர் 3ஆம் நாள், அமெரிக்க பிரதிநிதிகள் அவை, கூறப்படும் 2019 உய்கூர் மனித உரிமை சட்ட வரைவை அங்கீகரித்து, சீனாவின் சின்ஜியாங் மனித உரிமை நிலைமையையும், அதி தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அழிக்கும் சீனாவின் செயல்பாட்டையும் குறை கூறி, சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்துக்கான சீன அரசின் கொள்கையின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

சர்வதேச சட்டத்தையும் சர்வதேச உறவின் அடிப்படைக் கோட்பாட்டையும் மீறிய இந்நடவடிக்கை, சீன உள் விவகாரத்தில் கடுமையாகத் தலையீடு செய்துள்ளது. இதற்குச் சீன அரசு, கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றது.

சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில், சீனா மேற்கொண்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும், குறிப்பிட்ட பகுதிகள் தேசிய இனங்கள் மற்றும், மதங்களுக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்நடவடிக்கை, சீனாவின் சட்டத்திற்கும் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புக்கும் பொருந்தியது. சீனாவின் இந்நடவடிக்கையால், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகாலத்தில் ஒரு பயங்கரவாத தாக்குதல் கூட நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com