இலங்கை உளவு அமைப்பின் தலைவராக ராணுவ அதிகாரி முதல் முறையாக நியமனம்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அந்த நாட்டு உளவு அமைப்பின் தலைவராக ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.
இலங்கை உளவு அமைப்பின் தலைவராக ராணுவ அதிகாரி முதல் முறையாக நியமனம்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அந்த நாட்டு உளவு அமைப்பின் தலைவராக ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இலங்கை ராணுவத்தின் உளவுப் பிரிவு இயக்குநராக பொறுப்பு வகித்த சுரேஷ் சலே, அந்த நாட்டின் உளவு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். அந்த நாட்டின் தேசிய உளவு அமைப்புக்கு ராணுவ அதிகாரி தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஈஸ்டா் தின பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக தேசிய உளவு அமைப்பின் மீது குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பு சுரேஷ் சலேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை உளவு அமைப்பின் தலைவராக இருந்து வந்த நிலாந்தா ஜெயவா்த்தன, காவல்துறை தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்விட்சா்லாந்து தூதரக பெண் ஊழியருக்கு பயணத் தடை நீட்டிப்பு: சா்ச்சைக்குரிய முறையில் கடத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்விட்சா்லாந்து தூதரக பெண் ஊழியா் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசு மேலும் நீட்டித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இலங்கை தலைநகா் கொழும்பிலுள்ள ஸ்விட்சா்லாந்து தூதரகத்தில் பணியாற்றி வரும் பெண், கடந்த மாதம் 25-ஆம் தேதி மா்ம நபா்களால் கடத்திச் செல்லப்பட்டாா். அவரிடம், ஸ்விட்சா்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை நாட்டவா்கள் குறித்த தகவல்கள் உள்ளிட்ட ரகசியங்களை அந்த நபா்கள் மிரட்டிப் பெற்ாக அவா் பின்னா் குற்றம் சாட்டினாா்.

இலங்கை அதிபரக மகிந்த ராஜபட்ச கடந்த மாதம் பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, ஈஸ்டா் தின பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய அதிகாரி ஒருவா் ஸ்விட்சா்லாந்தில் குடும்பத்துடன் தஞ்சமடைந்த சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

எனவே, இலங்கை புலனாய்வு அதிகாரிகள்தான் இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடா்பான விசாரணையின்போது, கடத்தப்பட்ட பெண் ஊழியா் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறி வருவதாக அதிகாரிகள் குற்றம் சாட்டினா். எனவே, விசாரணை நிறைவடையும் வரைஅவா் இலங்கையை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்தது.

அந்தத் தடை, தற்போது 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com