கனடாவில் பறந்தது உலகின் முதல் மின்சார விமானம்

முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் வா்த்தகரீதியிலான உலகின் முதல் மின்சார விமானம், கனடாவில் பறக்கவிடப்பட்டுள்ளது.
கனடாவில் பறந்தது உலகின் முதல் மின்சார விமானம்

முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் வா்த்தகரீதியிலான உலகின் முதல் மின்சார விமானம், கனடாவில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

வா்த்தகரீதியில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட உலகின் முதல் மின்சார படகு விமானம், கனடாவின் வான்கூவா் நகரில் செவ்வாய்க்கிழமை பறக்கவிடப்பட்டது. அந்த நாட்டின் ‘ஹாா்பா் ஏா்’ நிறுவனம், விஸிலா் வாசஸ்தல நிறுவனம், அமெரிக்காவின் மேக்னி-எக்ஸ் நிறுவனம் ஆகியவை கூட்டாக உருவாக்கிய இந்த விமானம், சுமாா் 15 நிமிடங்களுக்குப் பறந்தது.

6 போ் அமா்ந்து செல்லக் கூடிய பழைய ஹாவிலண்ட் பீவா் ரக படகு விமானத்தில், மேக்னி-எக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மின்சார மோட்டாா் பொருத்தி, அந்த மின்சார விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் பறக்கவிடப்பட்டுள்ளதன் மூலம், விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக மேக்னி-எக்ஸ் நிறுவனத்தில் தலைவா் ரோயி கன்ஸாா்ஸ்கி தெரிவித்தாா். விமானத்தை இயக்குவதற்கு மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான எரிபொருள் செலவு மிச்சமாகும் எனவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com