எச்சரிக்கை அபாயம்! இப்படி கடல்மட்டம் உயர்ந்து கொண்டே இருந்தால் உலகம் அழிந்துவிடுமா?

சர்வதேச அளவில் கடல்மட்டம் விரைவாக உயர்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
greenland ice melt
greenland ice melt

சர்வதேச அளவில் கடல்மட்டம் விரைவாக உயர்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக கிரீன்லாந்தில் 1990-களில் இருந்ததை விட ஏழு மடங்கு வேகமாக பனி உருகிக் கொண்டிருக்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வு அறிக்கை.   2100-ம் ஆண்டு கடல் மட்டம்  ஒரு மீட்டருக்கும் குறைவான அளவே உயரும் என கூறப்பட்டது. ஆனால்,  இதைவிட இரண்டு மடங்கு உயருமென இப்போது ஆய்வாளர்கள்  கூறுகின்றனர். 

கிரீன்லாந்தில் இருந்து மட்டும் இந்த நூற்றாண்டின் இறுதியில் கூடுதலாக 7 செ.மீ கடல் உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருந்தால் 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலம் மறைந்துவிடும். அதாவது மிகப் பெரிய அளவில்  நிலப்பரப்பு மூழ்கிவிடும். க்ரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகாவில் அதிவிரைவாக கடல் மட்டம் உயர்வதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்நிலையில் லட்சகணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழப்பார்கள். உலகில் பல முக்கிய நகரங்களும் பாதிப்புக்குள்ளாகும். தாழ்வான கடலோரப் பகுதிகளில் இன்னும் பல மில்லியன் மக்களை வெள்ள அபாயத்திற்கு உள்ளாக்க நேரலாம் என்றும் இந்த ஆய்வு அச்சுறுத்துகிறது. இந்த மதிப்பீடு 26 ஆண்டு காலமாக அனைத்து செயற்கைக்கோள் கண்காணிப்புகளையும் மதிப்பாய்வு செய்த துருவ விஞ்ஞானிகளின் சர்வதேச குழுவிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

"புயல்கள், அவை உயர்ந்த கடல்களின் அடித்தளத்திற்கு எதிராக அடித்தால் - அவை வெள்ள பாதுகாப்புகளை உடைக்கும்" என்று லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆண்டி ஷெப்பர்ட் கூறினார்.

"இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், புவியைச் சுற்றி, கடல் மட்டத்தின் ஒவ்வொரு சென்டிமீட்டருக்கும் ஆறு மில்லியன் மக்கள் வெள்ளப் பெருக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்குக்குள்ளாக்கப்படுவார்கள். எனவே, ஒரு சென்டிமீட்டர் உயர்வும் கூட எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்," என்று பேராசிரியர் ஆண்டி ஷெப்பர்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com