சீனப் பொருளாதாரப் பணிக் கூட்டத்தில் எதிர்கால இலக்குகள்!

சீனாவின் மத்தியப் பொருளாதாரப் பணிக் கூட்டம் டிசம்பர் 10ஆம் நாள் முதல் 12ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
சீனப் பொருளாதாரப் பணிக் கூட்டத்தில் எதிர்கால இலக்குகள்!


சீனாவின் மத்தியப் பொருளாதாரப் பணிக் கூட்டம் டிசம்பர் 10ஆம் நாள் முதல் 12ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்தினார்.

அவர், 2019ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதாரப் பணிகளைத் தொகுத்துக் கூறினார். மேலும் தற்போதைய பொருளாதார நிலைமையை ஆராய்ந்த அவர் 2020ஆம் ஆண்டில் இத்துறையின் பணிகளுக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

சீனப் பொருளாதாரம் நிதானமாகவும் சீராகவும் வளர்ந்து வரும் போக்கு மாறவில்லை. 2019ஆம் ஆண்டில் பொருளாதாரமும் சமூகமும், தொடர்ந்து சீரான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. வறுமை ஒழிப்புப் பணி அதிக சாதனைகளைப் படைத்துள்ளது. உயிரினச் சுற்றுச்சூழல் ஒட்டுமொத்தமாக மேம்பட்டு வருகிறது என்று மத்தியப் பொருளாதாரப் பணிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 2020ஆம் ஆண்டுக்கான வறுமை ஒழிப்புப் பணி பன்முகங்களிலும் நிறைவேற்றப்படுவதை சீனா உத்தரவாதம் செய்துள்ளது. தொடர்புடைய கொள்கைகளின்படி, திபெத், சின்சியாங், யுன்னான், கான் சூ, சிச்சுவான் ஆகிய மாநிலங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களிலுள்ள மிகவும் வறிய இடங்களுக்கு அரசு நிதியுதவி வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு நாடளவில் வேலைவாய்ப்பின் மொத்த அளவு நிதானப்படுத்தப்படும். அதேவேளையில், ஒரு குடும்பத்தில் ஒருவருக்குக் கூட வேலை இல்லை என்ற நிலையும் நீக்கப்படும். வறிய மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். மருத்துவம், முதியோருக்கான அடிப்படை சமூகக்காப்புறுதி உள்ளிட்ட சேவைத் துறையின் சீர்திருத்தத்தையும் வெளிநாட்டுத் திறப்புப் பணியையும் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஆக்கப்பூர்வமான நிதிக் கொள்கையும் நிதானமான நாணயக் கொள்கையும் 2020 ஆம் ஆண்டில் சீனாவில் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். படைப்பாற்றல் இயக்கம், சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு ஆகியவற்றின் மூலம், பொருளாதாரத் துறையின் ஒட்டுமொத்த போட்டியாற்றலைப் பன்முகங்களிலும் உயர்த்தி, நவீனமயமாக்கப் பொருளாதார அமைப்பு முறையைச் சீனா முனைப்புடன் கட்டியமைக்கச் சீனா திட்டமிட்டுள்ளது.

அரசு சார் மூலதனத்தின் கட்டமைப்பைச் சீனா சீரமைக்கும். அரசு சார் தொழில் நிறுவனங்களுக்கான 3 ஆண்டு காலச் சீர்திருத்தத் திட்டப் பணி வகுக்கப்படும். மேலும், அரசு சாராப் பொருளாதாரத்தின் வளர்ச்சிச் சூழலை அரசு மேம்படுத்தும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையில், சீனாவின் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேலும் அதிகமான அளவில் மற்றும் விரிவான துறைகளில் நடைமுறைப்படுத்தல் என்ற திசை நோக்கி சீனா நடைபோட்டு வருகின்றது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com