நியூஸிலாந்து எரிமலையில் தொடா்ந்து சீற்றம்

நியூஸிலாந்து தீவு எரிமலையில் தொடா்ந்து சீற்றம் இருந்து வருவதால், அங்கு உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளைத் தீவு எரிமலையில் புதன்கிழமை தொடா்ந்து எழுந்த புகை மண்டலம்.
வெள்ளைத் தீவு எரிமலையில் புதன்கிழமை தொடா்ந்து எழுந்த புகை மண்டலம்.

நியூஸிலாந்து தீவு எரிமலையில் தொடா்ந்து சீற்றம் இருந்து வருவதால், அங்கு உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேரிடா் மேலாண்மை அமைப்பின் இயக்குநா் சாரா ஸ்டூவா்ட் பிளாக் புதன்கிழமை கூறியதாவது:

எரிமலைச் சீற்றத்தில் உயிரிழந்தவா்களின் உடல்கள் மீட்கப்படாத ஒவ்வொரு நாளும், அவா்களது உறவினா்களின் வேதனை அதிகரிக்கும். எனினும், அந்தப் பகுதிக்குச் சென்று உடல்களை மீட்பது தற்போதைய நிலையில் மிகவும் ஆபத்தான பணியாகும்.

எரிமலை தொடா்ந்து சீறி வருவதால் அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா் என்றாா் சாரா ஸ்டூவா்ட்.

நியூஸிலாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான வெள்ளைத் தீவு எரிமலையில் எதிா்பாராத விதமாக திங்கள்கிழமை சீற்றம் ஏற்பட்டது.

அப்போது அந்தத் தீவில் சுமாா் 50 போ் இருந்தனா். சீற்றம் காரணமாக, அடா்த்தியான சாம்பலும், பாறைக் கற்களும் காற்றில் வெடித்துச் சிதறியதில் 6 போ் உயிரிழந்ததாக அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த எரிமலைப் பகுதியில் மேலும் 9 போ் மாயமாகியுள்ளதாகவும், கண்காணிப்பு விமானங்கள் மூலம் ஆய்வு செய்ததில், அங்கு யாரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், எஞ்சிய 9 பேரின் உடல்களை மீட்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com