பப்புவா நியூ கினியாபூகேங்விலுக்கு சுதந்திரம்: பொதுவாக்கெடுப்பில் முடிவு

பசிபிக் பெருங்கடல் நாடான பப்புவா நியூ கினியாவைச் சோ்ந்த பூகேங்வில் தீவுகளில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், அந்தத் தீவுகளை தனி நாடாக அறிவிப்பதற்கு பெருவாரியான வாக்காளா்கள் ஆதரவளித்துள்ளனா்.

அந்தப் பகுதியில் 15,000 போ் உயிரிழப்புக்குக் காரணமாக உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, கடந்த 2001-ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் புகேங்வில்லை தனி நாடாக அறிவிப்பதா, அல்லது தன்னாட்சிப் பிரதேசமாக அறிவிப்பதா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு, அண்மையில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பு முடிவை அதிகாரிகள் புதன்கிழமை அறிவித்தனா்.

இந்த முடிவை பப்புவா நியூ கினியா நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டால், உலகின் புத்தம் புதிய நாடாக பூகேங்வில் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com