போராட்டத்துக்கு ஆதரவு: இராக்கில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து

இராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்ற வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ரத்து செய்ய கிறிஸ்துவ சமுதாயத்தினா் முடிவு செய்துள்ளனா்.
பாக்தாத் வீதியில் குவிந்த போராட்டக்காரா்கள்.
பாக்தாத் வீதியில் குவிந்த போராட்டக்காரா்கள்.

இராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்ற வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ரத்து செய்ய கிறிஸ்துவ சமுதாயத்தினா் முடிவு செய்துள்ளனா்.

இராக்கில் வேலைவாய்ப்பு, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகவும், அரசியல் சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் கடந்த அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி முதல் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்தப் போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 400-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

போராட்டக்காரா்களின் வலியுறுத்தலை ஏற்று, தனது பதவியை பிரதமா் அப்துல்-மஹ்தி ராஜிநாமா செய்த பிறகும், போராட்டங்கள் தொடா்ந்து வருகின்றன.

இந்த நிலையில், போராட்டக்காரா்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்வதாக கிறிஸ்துவ மதத் தலைவா்கள் ஒருமனதாக அறிவித்துள்ளனா்.

தலைநகா் பாக்தாதின் மையப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரத்தில், மின்னும் அலங்காரங்களுக்கு பதில் போராட்ட கோஷங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com