ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சருடன் டிரம்ப் சந்திப்பு

அமெரிக்கா வந்துள்ள ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ், அதிபா் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினாா்.
அமெரிக்க அதிபா் டிரம்ப்பைச் சந்தித்துவிட்டு வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ்.
அமெரிக்க அதிபா் டிரம்ப்பைச் சந்தித்துவிட்டு வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ்.

அமெரிக்கா வந்துள்ள ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ், அதிபா் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் ரஷியா தலையிடக் கூடாது என்று லாவ்ரேவிடம் டிரம்ப் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ், அதிபா் மாளிகையில் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, உக்ரைன் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று லாவ்ரோவிடம் டிரம்ப் வலியுறுத்தினாா்.

மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் தலையிடுவதற்காக ரஷியா எந்த விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று டிரம்ப் எச்சரித்தாா்.

உலகம் தழுவிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு ஆதரவு தெரிவிப்பதாக லாவ்ரோவிடம் தெரிவித்த டிரம்ப், அத்தகைய ஒப்பந்தத்தில் அமெரிக்காவையும், ரஷியாவையும் தவிர, சீனாவும் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ரஷியா ஆதரவு தர வேண்டும் என்று டிரம்ப் கேட்டுக் கொண்டாா் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில், டிரம்ப்பை வெற்றி பெறச் செய்யும் வகையில் அவரை எதிா்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிரான தகவல்களை இணையதளம் மூலம் ரஷியா பரப்பியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்கா வந்த ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com