பிரிட்டன் தேர்தல்: இந்திய வம்சாவளியினர் பெரிய அளவில் வெற்றி

இங்கிலாந்து தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.
பிரிட்டன் தேர்தல்: இந்திய வம்சாவளியினர் பெரிய அளவில் வெற்றி

லண்டன்: இங்கிலாந்து தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆளும் கன்சர்வேடிவ் மற்றும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிகள் இரண்டிலிருந்தும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இங்கிலாந்து பொதுத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரிதி படேல் தனது வித்தம் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக என்னை மீண்டும் தேர்ந்தெடுத்த வித்தம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி. நான் தொடர்ந்து உங்கள் வலுவான குரலாக இருப்பேன், தொகுதி முழுவதிலும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் ஆதரவாக நிற்கிறேன்" என்று படேல் வெள்ளிக்கிழமை ட்வீட் செய்துள்ளார்.

தென்மேற்கு ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் தொகுதியில் கன்சர்வேடிவ் கட்சியின் ககன் மொஹிந்திரா வெற்றி பெற்றுள்ளார்.

1935ம் ஆண்டுக்குப் பின் தொழிற்கட்சி அதன் மோசமான தேர்தல் முடிவுகளை சந்தித்திருந்தாலும், அக்கட்சியின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சிலர் தங்கள் இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனின் முதல் சீக்கிய பெண் எம்.பி.யாக 2017 தேர்தலில் வரலாறு படைத்த ப்ரீத் கவுர் கில் தனது எட்ஜ்பாஸ்டன் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

முதல் தலைப்பாகை அணிந்த சீக்கிய எம்.பி.யான தன்மஞ்சீத் சிங் தேசி, 29,421 இடங்களைப் பெற்று பெர்க்ஷயர் தொகுதியில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

வீரேந்திர சர்மா 2007 முதல் அவர் வகித்து வந்த தனது ஈலிங் சவுத்தால் தொகுதிக்கான இருக்கையைத் தக்க வைத்துக் கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com