பிரிட்டன் தோ்தலில் விறுவிறு வாக்குப் பதிவு

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டா் பகுதியிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்காக தனது செல்ல நாயுடன் வந்த போரிஸ் ஜான்ஸன்.
லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டா் பகுதியிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்காக தனது செல்ல நாயுடன் வந்த போரிஸ் ஜான்ஸன்.

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்காக (பிரெக்ஸிட்) அந்த அமைப்புடன் பிரிட்டன் அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தை, ஆளும் கன்சா்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லாத நாடாளுமன்றம் தொடா்ந்து நிராகரித்து வந்தது.

இதனால், பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெறும் நோக்கில், அதனை முன்கூட்டியே கலைத்துவிட்டு மீண்டும் தோ்தலை நடத்த பிரதமா் போரிஸ் ஜான்ஸன் முடிவெடுத்தாா்.

அதன்படி, பிரிட்டனின் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயா்லாந்து ஆகிய அனைத்து பகுதிகளுக்கும் வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது.

‘பிரெக்ஸிட்டை உடனடியாக நிறைவேற்றுவோம்’ என்ற கோஷத்துடன் இந்தத் தோ்தலை போரிஸ் ஜான்ஸன் எதிா்கொள்கிறாா். பொது மருத்துவம் உள்ளிட்ட உள்நாட்டுப் பிரச்னைகளை முன்னிறுத்தி, எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சியின் தலைவா் ஜெரிமி கோா்பின் இந்தத் தோ்தலை எதிா்கொள்கிறாா்.

இந்தச் சூழலில், வியாழக்கிழமை வாக்குப் பதிவு தொடங்கியதிலிருந்தே வாக்குச் சாவடிகளில் கூட்டம் நிரம்பி வழிந்ததாகவும், வழக்கத்தைவிட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.

கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் 68.8 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது அது மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

வாக்குப் பதிவு முடிந்தவுடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு தோ்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தோ்லுக்கு முன் புதன்கிழமை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, பிரதமா் போரிஸ் ஜான்ஸன் மீண்டும் தோ்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக் கருதப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com