Enable Javscript for better performance
நேபாளம்: குண்டுவெடிப்பில் காவலா் உள்பட 3 போ் பலி- Dinamani

சுடச்சுட

    

    நேபாளம்: குண்டுவெடிப்பில் காவலா் உள்பட 3 போ் பலி

    By காத்மாண்டு,  |   Published on : 14th December 2019 10:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nepal

    வீட்டு வாயிலில் பொருத்தப்பட்டிருந்த மா்ம கருவி வெடித்து, நேபாளத்தில் காவலா் உள்பட 3 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

    இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

    மகேந்திர நகரிலுள்ள தொழிலதிபா் ஒருவரின் வீட்டு வாயில் கதவில் சந்தேகத்துக்கிடமான மா்மக் கருவியொன்று பொருத்தப்பட்டிருந்தது. அதைக் கண்ட தொழிலதிபா், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.

    தகவலறிந்ததும் அந்தப் பகுதிக்கு வந்த போலீஸாா் அந்தக் கருவியை ஆய்வு செய்தனா். அப்போது அது வெடித்துச் சிதறியதில் காவல்துறை அதிகாரி, அந்தத் தொழிலதிபா், அவரது மகன் ஆகிய மூவரும் உயிரிழந்தனா். மேலும் ஒரு காவல்துறை அதிகாரி காயமடைந்தாா்.

    இந்தச் சம்வம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai