Enable Javscript for better performance
அமெரிக்காவில் படித்தவர்களுக்கு சாதகமாக ஹெச்-1பி விசா நடைமுறையில் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்காவில் படித்தவர்களுக்கு சாதகமாக ஹெச்-1பி விசா நடைமுறையில் மாற்றம்

    By DIN  |   Published on : 01st February 2019 01:34 AM  |   அ+அ அ-   |    |  

    h1b

    அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்காக வழங்கப்படும் ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) நடைமுறையில், அந்த நாட்டில் உயர் கல்வி பயின்றவர்களுக்கு சாதகமான வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
    இது, அமெரிக்காவில் பணியாற்ற திட்டமிட்டுள்ள, இந்தியாவில் உயர் கல்வி பயின்ற இந்தியர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
    இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பின் இயக்குநர் ஃபிரான்சிஸ் சிஸ்னா கூறியதாவது: ஹெச்-1பி விசா வழங்குவதற்கான நடைமுறையில் ஆக்கப்பூர்வமான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த மாற்றங்கள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.
    மிகவும் எளிமையான அந்த மாற்றங்கள், ஹெச்-1பி விசா மூலம் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு மிகுந்த பலனைத் தரும். 
    புதிய முறைப்படி, ஹெச்-1பி விசா விண்ணப்பதாரர்களுக்கான முதல் கட்டத் தேர்வில், அமெரிக்காவில் உயர் கல்வி பெற்றவர்களின் விண்ணப்பங்களும் சேர்த்து பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
    அதையடுத்து, அமெரிக்காவில் உயர் கல்வி பயின்றவர்களுக்காக மட்டும் நடைபெறும் 2-ஆவது தேர்விலும், அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
    இந்த வகையில், நாட்டில் உயர் கல்வி பயின்றவர்களின் விசா விண்ணப்பங்கள் அவர்களுக்கான தனிப் பிரிவில் மடடுமின்றி பொதுப் பிரிவிலும் பரிசீலிக்கப்படுவதால், அவர்களுக்கு விசா கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றார் ஃபிரான்சிஸ் சிஸ்னா.
    வரும் 2020-ஆம் ஆண்டில் ஹெச்-1பி விசா வழங்குவதற்காக, யுஎஸ்சிஐஎஸ் அமைப்பு வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை ஏற்கும்.
    ஆண்டுதோறும், பொதுப் பிரிவில் 65,000 பேருக்கும், அமெரிக்காவில் உயர் கல்வி பயின்றோருக்கான பிரிவில் கூடுதலாக 20,000 பேருக்கும் ஹெச்-1பி விசா வழங்கப்படும்.
    இந்த நிலையில், 65,000 விசாக்களுக்கான பொதுப் பிரிவிலும் 
    அமெரிக்காவில் உயர் கல்வி பயின்றோருக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதால், அந்தப் பிரிவினரில் கூடுதலாக 16 சதவீதம்  (5,340 பேர்) வரை ஹெச்-1பி விசா பெறுவார்கள் என்று ஊடகங்கள் கணிக்கின்றன.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp