ஷெரீஃப் மீதான தடையை நீக்க பாகிஸ்தான் அரசு மறுப்பு

நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருப்போர் பட்டியலில் இருந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம், மருமகன் ஆகியோரின் பெயர்களை நீக்குவதற்கு பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது.
ஷெரீஃப் மீதான தடையை நீக்க பாகிஸ்தான் அரசு மறுப்பு

நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருப்போர் பட்டியலில் இருந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம், மருமகன் ஆகியோரின் பெயர்களை நீக்குவதற்கு பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது.
 நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம், மருமகன் முகமது சப்தார் ஆகியோருக்கு பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தில் 3 பேரும் தனித்தனியாக மனு அளித்தனர். அந்த மனுவில், நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருப்போர் பட்டியலில் இருந்து தங்களின் பெயர்களை நீக்க வேண்டுமென 3 பேரும் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் அந்த மனுவில், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், பயங்கரவாதம் அல்லது சதி ஆகிய குற்றங்களில் தாங்கள் ஈடுபட்டது கிடையாது, ஆதலால் நாட்டை விட்டு வெளியேற தடை செய்யும் 2010ஆம் ஆண்டு விதிகள் தங்களுக்கு பொருந்தாது என்று 3 பேரும் தெரிவித்திருந்தனர்.
 இந்நிலையில், ஷெரீஃப் உள்ளிட்ட 3 பேரின் மனுக்களையும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை நிராகரித்து விட்டது. இந்தச் செய்தியை பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி ஊடகமான ஜியோ நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
 லண்டனில் சொத்து ஒன்றை வாங்கியது தொடர்பான வழக்கில், நவாஸ் ஷெரீஃப், மரியம், சப்தார் ஆகியோருக்கு முறையே 11 ஆண்டுகள், 8 ஆண்டுகள், ஓராண்டு சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் பொறுப்புடைமை நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில், ஷெரீஃப் உள்ளிட்ட 3 பேருக்கும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, ஷெரீஃப் உள்ளிட்டோர் தொடுத்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம், 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்தது.
 அதேநேரத்தில், மற்றொரு வழக்கில் ஷெரீஃபுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் பொறுப்புடைமை நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஷெரீஃப் சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com