சுடச்சுட

  

  சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதல்: 70 பேர் பலி 

  By DIN  |   Published on : 12th February 2019 05:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  US_air_strike

   

  டமாஸ்கஸ்: சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், பொதுமக்கள் 70 பேர் பலியாகியுள்ள தகவல் வெளிவந்துள்ளது

  சிரியாவின் பெரும்பான்மையான பகுதிகளை ஆக்கிரமித்திருந்த ஐ.எஸ்.பயங்கரவாதிகள் அரசுப்படையினரால் ஒடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எஞ்சியுள்ள சிலர் யூப்ரட்டிஸ் நதிக்கரையின் ஓரத்தின் உள்ள மறைவிடங்களில் பதுங்கி வாழ்கின்றனர்.

  அவ்வாறு டேய்ர் அல் சவுர் மாகாணத்தில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக பாகோவ்ஸ் நகரம் உள்ளிட்ட இடங்களில் வசித்துவந்த சுமார் 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு, தாற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

  இந்நிலையில் சிரியாவின் டேய்ர் அல் சவுர் மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், பொதுமக்கள் 70 பேர் பலியாகியுள்ள தகவல் வெளிவந்துள்ளது

  அமெரிக்கா தலைமையிலான உள்நாட்டு விமானப்படை செவ்வாயன்று நடத்திய தாக்குதலில், அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாமின் மீது குண்டுகள் விழுந்ததில் பொதுமக்களில் 70 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai