சுடச்சுட

  
  Mojaddedi


  ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் ரஷியா ராணுவம் திரும்பிச் சென்ற பிறகு 1992-ஆம் ஆண்டு முதலாவதாக அந்நாட்டின் அதிபராகப் பதவியேற்ற சிப்ஹத்துல்லா முஜாதிதி (93) திங்கள்கிழமை காலமானார்.
  கம்யூனிஸ எதிர்ப்பு கொரில்லா தலைவரான அவர், அமெரிக்காவின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் ரஷியாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரப் போராடி அதில் வெற்றி பெற்றார். ஆப்கானிஸ்தான் தேசிய விடுதலை முன்னணி என்ற படையை அவர் உருவாக்கினார். 
  அந்த காலகட்டத்தில் சர்வதேச அளவில் நவீன ஆயுதங்களை வைத்திருந்த கொரில்லா படையாக முஜாதிதியின் அமைப்பு திகழ்ந்தது. அமெரிக்காவின் ஆதரவை முழுமையாகப் பெற்றிருந்த முஜாதிதி, அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனால் சுதந்தரப் போராட்ட வீரர் என்று புகழப்பட்டவர். ஆப்கானிஸ்தான் அதிபராக 2 மாதங்களே பதவி வகித்தபோதிலும், அந்நாட்டு மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவராக திகழ்ந்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai