சுடச்சுட

  

  யூதர்களுக்கு எதிரான கருத்து: மன்னிப்பு கோரினார் அமெரிக்க முஸ்லிம் எம்.பி.

  By DIN  |   Published on : 13th February 2019 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  illahan


  யூதர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தமைக்காக அமெரிக்க முஸ்லிம் பெண் எம்.பி.  இல்ஹான் அப்துலாஹி ஒமர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
  அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்ட இரண்டு முஸ்லிம் பெண் எம்.பி.க்களில் இல்ஹான் அப்துலாஹியும் ஒருவர். அவர் சோமாலிய வம்சாவளி அமெரிக்கர் ஆவார். 37 வயதாகும் அப்துலாஹி, கடந்த ஆண்டு நவம்பரில் குடியரசுக் கட்சி சார்பில் எம்.பி.யானவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, இல்ஹான் அப்துலாஹி, சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், அமெரிக்க -இஸ்ரேலிய பொது விவகாரங்கள் துறைக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையேயான உறவுகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதில் யூதர்களை அவமதிக்கும் வகையிலான கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.
  இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதைக் கண்டித்தார். தனது கருத்துக்காக அப்துலாஹி மன்னிப்பு கேட்பதைக் காட்டிலும், அவர் வெட்கப்பட வேண்டும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
  இந்நிலையில் தனது கருத்துக்காக இல்ஹான் அப்துலாஹி மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், யூதர்களுக்கு எதிரான இன்னல்கள் உண்மைதான். யூத கூட்டாளிகள் மற்றும் சக பணியாளர்கள்,  யூதர்களுக்கு எதிரான வலிமிகுந்த வரலாற்றை எனக்கு போதித்துள்ளனர். அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
  எனது தொகுதி மக்களையோ அல்லது அமெரிக்க யூதர்களையோ அவமதிக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. என்னை எனது அடையாளத்தை வைத்து பிறர் விமர்சிக்கும்போது, மக்கள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அதைப்போலவே பிறரை விமர்சிக்கும்போதும் நாம் சிந்திக்க வேண்டும். அந்த வகையில், நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai