வெனிசூலா விவகாரத்தில் சமரசம் செய்து வைக்கத் தயார்:  ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ்

அரசியல் பதற்றம் நிலவி வரும் வெனிசூலாவில் அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கும், இடைக்கால அதிபராக தம்மை அறிவித்துக் கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோவுக்கும்
வெனிசூலா விவகாரத்தில் சமரசம் செய்து வைக்கத் தயார்:  ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ்

அரசியல் பதற்றம் நிலவி வரும் வெனிசூலாவில் அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கும், இடைக்கால அதிபராக தம்மை அறிவித்துக் கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோவுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கத் தயாராக இருப்பதாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் மீண்டும் தெரிவித்துள்ளார்.
வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் அழைப்பை ஏற்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் அரீஸாவை ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் திங்கள்கிழமை சந்தித்து வெனிசூலா அரசியல் பதற்றம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, வெனிசூலா பிரச்னையைத் தீர்ப்பதற்கான சமரசப் பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்திவைக்கத் தயாராக இருப்பதாக ஜார்ஜ் அரீஸாவிடம் குட்டெரெஸ் தெரிவித்தார் என ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டிஃபானி துஜாரிக் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக களம் அமைத்துத் தரத் தயார் என்று அன்டோனியோ குட்டெரெஸ் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது ஐ.நா. செய்தித் தொடர்பாளர் அதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
வெனிசூலாவில், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிக்கோலஸ் மடூரோ தலைமையிலான ஆட்சியில்  பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக, 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது.
எனினும், நாடாளுமன்றத்துக்கு ஆட்சி அதிகாரத்தைத் தர மறுத்த மடூரோ, அதை விட அதிக அதிகாரம் படைத்த அரசியல் சாசனப் பேரவையை 2017-ஆம் ஆண்டு அமைத்து ஆட்சி செலுத்தி வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில், மடூரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்து. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களில் பலர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், வெனிசூலா நாடாளுமன்றத் தலைவராக பொறுப்பு வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்  ஜுவான் குவாய்டோ, நாட்டின் இடைக்கால அதிபராக தம்மை கடந்த மாதம் அறிவித்துக் கொண்டார்.  
இந்தச் சூழலில், இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சமாதானப் பேச்சுவார்த்தையை நடத்தித் தர ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் தற்போது முன்வந்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com