நைஜீரியா அதிபர் தேர்தல் ஒத்திவைப்பு

நைஜீரியாவில் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த அதிபர் மற்றும் மக்களவைத் தேர்தல்கள் தொடங்க சில மணிநேரம் இருக்கும்போது திடீரென ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

நைஜீரியாவில் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த அதிபர் மற்றும் மக்களவைத் தேர்தல்கள் தொடங்க சில மணிநேரம் இருக்கும்போது திடீரென ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டன.
 ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் நைஜீரியாவில் அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் சனிக்கிழமை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்றத்தின் கீழவையில் உள்ள 360 இடங்கள் மற்றும் மேலவையில் 109 இடங்களுக்குத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.
 இந்தப் பொதுத் தேர்தலையொட்டி, ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அதிபர் தேர்தலில் சாதனை அளவாக 73 வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்து வாக்குப் பதிவுக்காக காத்திருந்தனர்.
 வாக்குப் பதிவு தொடங்க 5 மணி நேரம் இருக்கும்போது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 இதுகுறித்து அந்நாட்டின் தேசிய தேர்தல் ஆணையர் (ஐஎன்இசி) மெஹ்மூத் யாகூபு கூறியதாவது: வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட அவசர ஆலோசனையின் அடிப்படையில் சனிக்கிழமை நடைபெற வேண்டிய தேர்தலை ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. தேர்தல் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும்.
 கடந்த 2 வார காலத்தில் நாட்டின் வெவ்வேறு இடங்களில் தேர்தல் பொருள்கள், வாக்குச் சீட்டு ஸ்மார்ட் கார்டு ரீடர்கள் மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தும், உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com