ஐ.எஸ். கைதிகளை திரும்பப் பெற்றுக் கொள்ள ஐரோப்பிய நாடுகளிடம் டிரம்ப் வலியுறுத்தல்

ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்று சிரியாவில் பிடிபட்ட 800-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய தேச (ஐ.எஸ்) பயங்கரவாதிகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி அந்த நாடுகளிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியு
ஐ.எஸ். கைதிகளை திரும்பப் பெற்றுக் கொள்ள ஐரோப்பிய நாடுகளிடம் டிரம்ப் வலியுறுத்தல்

ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்று சிரியாவில் பிடிபட்ட 800-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய தேச (ஐ.எஸ்) பயங்கரவாதிகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி அந்த நாடுகளிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
 இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது: பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற நாடுகளிலிருந்து சிரியா சென்று போரிட்டு, அமெரிக்க கூட்டுப் படையினரிடம் பிடிபட்டுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை, அந்த நாடுகள் திரும்பப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
 ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஐரோப்பிய சமூகத்துக்குள் ஊடுருவுவதை நாங்கள் விரும்பவில்லை.
 எனவே, சிரியாவில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகளை ஐரோப்பிய நாடுகள் தங்களது நாடுகளில் உள்ள சிறையில் அடைத்து, அவர்களது குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று டிரம்ப் தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 கடந்த 2014-ஆம் ஆண்டில், அதுவரை அதிகம் அறியப்படாத ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவிலும், இராக்கிலும் கணிசமான இடங்களை அதிரடியாகக் கைப்பற்றினர். எனினும், அமெரிக்கக் கூட்டுப் படையின் உதவியுடன் சிரியாவிலுள்ள குர்து மற்றும் கிளர்ச்சிப் படையினரும், ரஷியாவின் உதவியுடன் சிரியா ராணுவமும் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளால் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்த 95 சதவீத பகுதிகள் மீட்கப்பட்டன.
 ஐ.எஸ்.ஸுக்கு எதிராக சிரியாவில் சண்டையிட்டு வரும் குர்துகள் மற்றும் கிளர்ச்சிப் படையினருக்கு ஆதரவாக அங்கு 2,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்றி வந்தனர்.
 இந்த நிலையில், சிரியாவில் ஐ.எஸ்.ûஸ ஒழிக்கும் நோக்கம் நிறைவேறிவிட்டதால், அங்கிருக்கும் வீரர்கள் அனைவரையும் திரும்ப அழைக்கப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிரடியாக அறிவித்தார்.
 இந்த நிலையில், சிரியாவிலுள்ள ஐ.எஸ். கைதிகளை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தற்போது ஐரோப்பிய நாடுகளிடம் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com