ஜாதவின் வாக்குமூலம் ஜோடிக்கப்பட்ட ஒன்று: சர்வதேச நீதிமன்றத்தில் ஹரீஷ் சால்வே வாதம்

குல்பூஷண் ஜாதவ் அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலம் மிரட்டி வாங்கப்பட்ட ஒரு பொய்யான தகவல் என்று சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே வாதத்தை முன் வைத்துள்ளார்.

மேலும், ஜாதவ் எப்போது கைது செய்யப்பட்டார் என்பது குறித்தோ, வழக்கு விசாரணை குறித்தோ பாகிஸ்தான் எந்த ஆவணங்களையும் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும், தூதர அதிகாரியுடனான சந்திப்பை இந்தியா வலியுறுத்தியும் கூட பாகிஸ்தான் பதில் தராமல் இருந்து விட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து, இந்தியா சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று விசாரணை துவங்கியது.

நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், இன்று தொடங்கி வியாழக்கிழமை (பிப்.21) வரையில் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத செயல்களை தூண்டியதாகவும் குல்பூஷண் ஜாதவ் (48) மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதற்கு அடுத்த மாதம், அந்த தீர்ப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. 2017 மே 18-ஆம் தேதி, சர்வதேச நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணை முடிவடையும் வரையில் குல்பூஷண் ஜாதவுக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று முதல் வழக்கு விசாரணை தொடங்கியது. இந்தியாவின் சார்பில் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடினார். பாகிஸ்தான் சார்பில், பிரிட்டன் ராணியின் வழக்குரைஞராக செயல்படும் கவார் குரேஷி ஆஜராகி, வாதாட உள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தின் இணையதளம், ஐ.நா.வின் இணையதள தொலைக்காட்சி மற்றும் ஐ.நா.வின் தொலைக்காட்சி அலைவரிசை ஆகியவற்றில், வழக்கு விசாரணை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின் முடிந்து, சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு கோடை காலத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி: இந்திய கடற்படையில் கமாண்டோவாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈரானி

பின்னணி: இந்திய கடற்படையில் கமாண்டோவாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈரானில் இருந்து சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாகக் கூறி பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். முஸ்லிம் பெயரில் போலியான கடவுச்சீட்டு வைத்திருந்தார் என்றும் பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியது. ஆனால், வியாபார நிமித்தமாக ஈரான் சென்றிருந்த குல்பூஷண் ஜாதவை, அங்கிருந்து கடத்தி வந்து பாகிஸ்தான் ராணுவம் கைது செய்ததாக இந்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது.
 
ல் இருந்து சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாகக் கூறி பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். முஸ்லிம் பெயரில் போலியான கடவுச்சீட்டு வைத்திருந்தார் என்றும் பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியது. ஆனால், வியாபார நிமித்தமாக ஈரான் சென்றிருந்த குல்பூஷண் ஜாதவை, அங்கிருந்து கடத்தி வந்து பாகிஸ்தான் ராணுவம் கைது செய்ததாக இந்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com