சுடச்சுட

  
  syria_blast

   

  இட்லிப்: சிரியாவில் திங்களன்று நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 24 பேர் பலியானார்கள்.

  சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது இட்லிப் மாகாணம். அரசுக்கு எதிராகப் போராடி வரும் கிளர்ச்சி படையினர் வலிமையாக உள்ள கடைசிப் பகுதியாகும். எனவே இங்கு அதிபர் அல்  பஷார் அரசுப் படைகள் மூலம் குண்டுகள் வீசுவது தொடர்ந்து வருகிறது.

  இந்நிலையில் திங்களன்று அங்கு நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 24 பேர் பலியானார்கள்.

  இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் திங்கள் மாலை முதல் குண்டுவெடித்தது. வாகனம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த குண்டு வெடிக்கச் செய்யபட்டது. சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்  உள்ளிட்ட மீட்பு படைகள் வந்து சேர்ந்த தருணத்தில் இரண்டாவது குண்டும் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.

  இந்த கோர சம்பவத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 24 பேர் பலியானார்கள்.

  தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai