இந்தியப் படங்களை திரையிட தடை விதிக்கவேண்டும்: பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு

பாகிஸ்தானில் இந்தியப் படங்களை திரையிட முழுமையாகத் தடை விதிக்கக் கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


பாகிஸ்தானில் இந்தியப் படங்களை திரையிட முழுமையாகத் தடை விதிக்கக் கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத அமைப்பின் தற்கொலைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான கண்டனங்களும், விமரிசனங்களும் எழுந்தது. 

அதன் ஒருபகுதியாக, இந்தியப் படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிக்கக் கூடாது என்றும் இந்தியப் படங்கள் பாகிஸ்தானில் வெளியிடக் கூடாது என்றும் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் அறிவித்தது. 

இந்நிலையில், இந்த நிகழ்வுக்கு எதிரொலியாக பாகிஸ்தானில் லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஷேக் லதீஃப் எனும் அந்நாட்டு குடிமகன் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, 

"கடந்த 2016-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தால், பாகிஸ்தான் தொலைக்காட்சி, எஃப்எம். வானொலிகள் ஆகியவற்றில் இந்திய திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், ஜனவரி 31, 2017-இல் தகவல் துறை அமைச்சகத்தின் ஊடாக இந்தியப் படங்கள் உட்பட அனைத்துப் படங்களும் பாகிஸ்தானில் திரையிடப்படலாம் என்ற அறிவிப்பை அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிஃப் வெளியிட்டார்.  

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அந்த அறிவிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அதனால், அந்த அறிவிப்பு செல்லாது. மேலும், இந்திய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியிருந்தது. எனவே, ஜனவரி 2017 இல் வெளியான சட்டவிரோத அறிவிப்புக்கு தடை விதிக்கவேண்டும். மேலும், இந்தியப் படங்கள் மற்றும் இந்தியா சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முழுமையாகத் தடை விதிக்க உத்தரவிடவேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com