உலகக் கோப்பை: இந்திய-பாக். ஆட்ட டிக்கெட்டுகளை வாங்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் ஆட்டத்துக்கான டிக்கெட்டை வாங்க 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என இயக்குநர் ஸ்டீவ் எல்வொர்த்தி கூறியுள்ளார்.


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் ஆட்டத்துக்கான டிக்கெட்டை வாங்க 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என இயக்குநர் ஸ்டீவ் எல்வொர்த்தி கூறியுள்ளார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானுடன் உலகக் கோப்பையில் இந்தியா விளையாடக் கூடாது என கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், கங்குலி, உள்பட பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்படி செயல்படுவோம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
4 லட்சம் பேர் விண்ணப்பம்: இங்கிலாந்தில் வரும் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை நடக்கவுள்ள உலகக் கோப்பையில் இந்திய-பாக். அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16-இல் மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடக்கிறது. இதில் மொத்தம் 25000 பார்வையாளர்கள் அமர முடியும். 
இந்த ஆட்டத்தைக் காண 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது ஆஸ்திரேலிய-இங்கிலாந்து ஆட்டம் அல்லது இறுதிச் சுற்று ஆட்டத்துக்கான டிக்கெட்டுகளை வாங்க விண்ணப்பித்துளளோரை விட அதிகம்.
 ஆஸி.-இங்கிலாந்து ஆட்டத்துக்கு 2.4 லட்சம் பேரும், இறுதி ஆட்டத்துக்கு 2.7 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். 4 லட்சம் பேர் என்பது உள்ளூரில் மட்டுமே, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இன்னும் உள்ளனர் என்றார் எல்வொர்தி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com