வலுவடைகிறது ஓமா புயல்: ஆஸ்திரேலிய கடலோரப்பகுதிக்கு எச்சரிக்கை

பசிபிக் தீவுகளைத் தாக்கிய ஓமா புயல் வலுவடைந்து ஆஸ்திரேலியாவை நோக்கி நகர்ந்து செல்வதால் இப்புயல் ஆஸ்திரேலிய கடலோரப்பகுதிகளை கடுமையாக தாக்கும் அபாயம் உள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை


பசிபிக் தீவுகளைத் தாக்கிய ஓமா புயல் வலுவடைந்து ஆஸ்திரேலியாவை நோக்கி நகர்ந்து செல்வதால் இப்புயல் ஆஸ்திரேலிய கடலோரப்பகுதிகளை கடுமையாக தாக்கும் அபாயம் உள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
முன்னதாக, பசிபிக் தீவுகளை புதன்கிழமை அதிகாலையில் இருந்தே ஓமா புயல் மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் சூறாவளியாக மாறி தாக்குதலை தொடங்கி விட்டது. தற்போது, ஆஸ்திரேலிய கடலோரப்பகுதிக்கு அப்பால் உள்ள இந்த சூறாவளிப் புயல் புது கலிடோனியா பகுதியை, அதிவேகமாக தாக்கியதில் அங்கு முழுமையான மின்தடை ஏற்பட்டது. ஏராளமான பயிர்களும், விளைநிலங்களும் நாசமானது. ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. 
வானிலை மையத்தினர் கூறியதாவது: ஓமா புயல் தீவிரமடைந்துள்ளதால், இனி அது மெல்ல நகர்ந்து தென்மேற்கு கிழக்குப்பகுதியான கோரல் கடல் பகுதியை சில தினங்களில் தாக்கும்.
இந்த புயல் காரணமாக கடல் அலைகள் இயல்பு நிலையை விட அதிக உயரத்தில் எழுச்சியடையும். இப்புயல் ஆஸ்திரேலியாவின் தெற்கு குயின்ஸ்லாந்தின் கிழக்கு கடலோரப்பகுதியை கடுமையாக தாக்கும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்  என்று தெரிவித்துள்ளனர்.  இந்த தீவிர புயல் எச்சரிக்கை காரணமாக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com