Enable Javscript for better performance
ஈரான் அமைச்சரின் ராஜிநாமா நிராகரிப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு உலகம்

    ஈரான் அமைச்சரின் ராஜிநாமா நிராகரிப்பு

    By DIN  |   Published On : 28th February 2019 12:52 AM  |   Last Updated : 28th February 2019 12:52 AM  |  அ+அ அ-  |  

    fm

    முகமது ஜாவத் ஸரீஃபின், ஹஸன் ரெளஹானி


    ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஸரீஃபின் ராஜிநாமாவை, அந்நாட்டு அதிபர் ஹஸன் ரெளஹானி நிராகரித்துள்ளார்.
    ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதில் முக்கிய பங்கு வகித்தவர் முகமது ஜாவத் ஸரீஃப். அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்தார். 
    தனது அணுசக்தித் திட்டங்கள், அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டன.
    அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், ஈரானை அணு ஆயுதங்கள் தயாரிக்காமல் தடுப்பதற்கு போதுமானதாக இல்லை என்று தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்து வந்தார். இந்த நிலையில், அந்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக டிரம்ப் கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தார்.
    இதற்கு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிற நாடுகளான ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே சமயம், அமெரிக்கா இல்லாமலேயே அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்து அந்த நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
    இந்தச் சூழலில், அணுசக்திப் பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்கு வகித்த ஈரான் அமைச்சர் முகமது ஜாவத் ஸரீஃப் ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். 
    ராஜிநாமா நிராகரிப்பு: அமைச்சரின் ராஜிநாமாவால், வல்லரசு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும், அதிபர் ரெளஹானியின் முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்படும் என்று கருதப்பட்டது. இதையடுத்து, அவரது ராஜிநாமாவை அதிபர் நிராகரித்துள்ளதாக, ஈரான் அரசு ஊடகமான ஐ.ஆர்.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.
    அதில், அமெரிக்கா அளிக்கும் மாபெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதில், நீங்கள் (அமைச்சர்) முன் வரிசையில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் ராஜிநாமாவை ஏற்பது நாட்டு நலனுக்கு எதிரானதாக அமையும் என்றும் கருதுகிறேன். ஆகவே, நான் அதை ஏற்கவில்லை என்று அதிபர் ஹஸன் ரெளஹானி தெரிவித்துள்ளார்.


     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp