
சிரியாவில் கிளர்ச்சிப் படையினருக்கும், அல்-காய்தா தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வரும் சண்டையில் இரு தரப்பிலும் 50 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறியதாவது:
சிரியாவின் அலெப்போ மாகாணத்தில், அல்-காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஹாயத் தெஹ்ரீர் அல்-ஷாம் அமைப்புக்கும், கிளர்ச்சி அமைப்புகளின் கூட்டுப் படைக்கும் இடையே கடந்த இரண்டு நாள்களாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்தச் சண்டையில், கிளர்ச்சியாளர்கள் தரப்பில் 19 பேரும், பயங்கரவாதிகள் தரப்பில் 24 பேரும் உயிரிழந்தனர் என்றார் ரமி அப்தெல் ரஹ்மான்.