Enable Javscript for better performance
அல்-அஜீஸா இரும்பு உருக்காலை முறைகேடு: நவாஸ் வழக்கு: காலவரையறையின்றி விசாரணை ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    அல்-அஜீஸா இரும்பு உருக்காலை முறைகேடு: நவாஸ் வழக்கு: காலவரையறையின்றி விசாரணை ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 08th January 2019 01:06 AM  |   அ+அ அ-   |    |  

    Nawaz-Sharif11


    உருக்காலை முறைகேடு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அந்நாட்டு உயர்நீதிமன்றம் காலவரையறையின்றி ஒத்தி வைத்துள்ளது.
    அல்-அஜீஸா இரும்பு உருக்காலை தொடர்பான வழக்கில், நவாஸ் ஷெரீஃபுக்கு ஊழல் தடுப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
    இந்த தீர்ப்பை எதிர்த்து, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீஃப் கடந்த 1-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், அல்-அஜீஸா உருக்காலை வழக்கில் ஊகங்களின் அடிப்படையில் தனக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இதுதவிர, தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, மற்றொரு மனுவையும் அவர் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன்னுடைய மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடியும், தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
    இந்த இரு மனுக்களும் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அத்தர் மினல்லா தலைமையிலான 2 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை காலவரையறையின்றி ஒத்தி வைத்தனர். ஷெரீஃபின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கிய பிறகே, தண்டனயை நிறுத்தி வைக்கக் கோரும் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
    பனாமா ஆவண முறைகேடுகள் தொடர்பாக, லண்டன் அவென்ஃபீல்டு ஊழல் வழக்கு, அல்-அஜீஸா உருக்காலை வழக்கு, ஃபிளாக்ஷிப் இன்வெஸ்ட்மென்ட் நிறுவன வழக்கு ஆகிய மூன்று வழக்குகள் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது பதிவு செய்யப்பட்டன.
    அவற்றில், அவென்ஃபீல்டு ஊழல் வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகளும், அவரது மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    இதனால், கடந்த கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் நவாஸ் ஷெரீஃப் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், அவென்ஃபீல்டு ஊழல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் நிறுத்திவைத்தது. அதையடுத்து, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
    இந்தச் சூழலில், நவாஸ் மீது ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அல்-அஜீஸா முறைகேடு வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாதம் 24-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. எனினும், மற்றொரு வழக்கான ஃபிளாக்ஷிப் இன்வெஸ்ட்மென்ட் வழக்கிலிருந்து நவாஸ் ஷெரீஃப் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து நவாஸ் ஷெரீஃப் உடனடியாக கைது செய்யப்பட்டு, லாகூரிலுள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp