சுடச்சுட

    

    காங்கோ குடியரசு: தேர்தல் முடிவை எதிர்த்து முறையீடு

    By  கின்ஷாசா,  |   Published on : 13th January 2019 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    MARTIN_FAYULU

    காங்கோ குடியரசில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ஃபெலிக்ஸ் ஷிசேகெடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
     அந்தத் தேர்தலில், ஃபெலிக்ஸுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள மார்ட்டின் ஃபாயுலு அந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
     இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால், ஃபெலிக்ஸ் ஷிசேகெடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாததாக்கும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்' என்று தெரிவித்தார். காங்கோ குடியரசில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்றது. அதில், எதிர்க்கட்சியான ஜனநாயக மற்றும் சமூக முன்னேற்றக் கட்சியின் தலைவர் ஃபெலிக்ஸ் ஷிசேகெடி வெற்றி பெற்றதாக கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டார்.
     அவர் வரும் 18-ஆம் தேதி அதிபராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai