சுடச்சுட

  
  coal_mine_accident

   

  பெய்ஜிங்: சீனாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்று சரிந்து ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியாகினர்.

  சீனாவில் வடமேற்கு பகுதியிகள் உள்ள ஷென்மு நகரில் லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு 87 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர்.  இந்நிலையில் ஞாயிறன்று சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது.  இந்த விபத்தில் 19 பேர் பலியாகினர்.

  இதனைத் தொடர்ந்து தகவலறிந்து அங்கு வந்த மீட்பு படையினரால் மீதமுள்ள 66 பேர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 2 பேரை மீட்கும் பணி தொடந்துநடைபெற்று வருகிறது. விபத்திற்கான காரணம் குறித்து தொடந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai