சுடச்சுட

  

  2020 அதிபர் தேர்தலில் போட்டி: துளசி கபார்ட் அறிவிப்பு

  By  வாஷிங்டன்,  |   Published on : 13th January 2019 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  BG

  அமெரிக்காவில் வரும் 2020-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஹவாய் மாகாண எம்.பி. துளசி கபார்ட் தெரிவித்துள்ளார்.
   அமெரிக்காவின் முதல் ஹிந்து நாடாளுமன்ற உறுப்பினரான இவர், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஒரு வாரத்துக்குள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
   ஏற்கெனவே, அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் முறையாக ஒரு ஹிந்து வேட்பாளர் போட்டியிட்டால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து இந்திய வம்சாவளியினரின் கருத்துகளை துளசி கபார்ட் கேட்டறிந்து வந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
   இந்தச் சூழலில், தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரீசிலித்து வருவதாக அவர் கடந்த மாதம் முதல் முறையாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை துளசி கபார்ட் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
   ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த துளசி கபார்ட், ஹவாய் மாகாணத்தின் 2-ஆவது தொகுதி எம்.பி.யாக பொறுப்பு வகித்து வருகிறார். சமோவா தீவுகளைப் பூர்விகமாக் கொண்ட இவர்தான், அமெரிக்காவின் முதல் ஹிந்து நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், அந்தப் பதவிக்குப் போட்டியிடும் முதல் ஹிந்து என்ற பெருமையையும் அவர் பெறுவார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai