காங்கோ குடியரசு: தேர்தல் முடிவை எதிர்த்து முறையீடு

காங்கோ குடியரசு: தேர்தல் முடிவை எதிர்த்து முறையீடு

காங்கோ குடியரசில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ஃபெலிக்ஸ் ஷிசேகெடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றத்தில் முறையீட்டு

காங்கோ குடியரசில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ஃபெலிக்ஸ் ஷிசேகெடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 அந்தத் தேர்தலில், ஃபெலிக்ஸுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள மார்ட்டின் ஃபாயுலு அந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
 இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால், ஃபெலிக்ஸ் ஷிசேகெடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாததாக்கும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்' என்று தெரிவித்தார். காங்கோ குடியரசில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்றது. அதில், எதிர்க்கட்சியான ஜனநாயக மற்றும் சமூக முன்னேற்றக் கட்சியின் தலைவர் ஃபெலிக்ஸ் ஷிசேகெடி வெற்றி பெற்றதாக கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டார்.
 அவர் வரும் 18-ஆம் தேதி அதிபராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com