சகிப்பின்மையை ஒழிப்பது மிகப்பெரும் சவால்

நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மையை ஒழித்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே மக்களவைத் தேர்தலில் மிகப்பெரும் சவால் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சகிப்பின்மையை ஒழிப்பது மிகப்பெரும் சவால்

நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மையை ஒழித்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே மக்களவைத் தேர்தலில் மிகப்பெரும் சவால் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 மக்களவைத் தேர்தலுக்காக உலக அளவில் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, துபை பல்கலைக்கழக மாணவர்களிடம் சனிக்கிழமை பேசியதாவது:
 பல்வேறு நபர்களின் உன்னத சிந்தனையால் இந்தியா உருவானது. மற்றவர்களின் கருத்தைக் கேட்பது இந்தியாவின் அடிப்படையாக உள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளாக நாட்டில் சகிப்பின்மையும், சமூகத்தில் பிரிவும் அதிகரித்து வருகிறது. நாட்டை ஆட்சி புரிந்து வருபவர்களிடமிருந்தே இவை பரவியுள்ளன. நாட்டின் தலைவர் சகிப்புத்தன்மையோடு நடந்துகொண்டால், மக்களும் அதனைக் கடைப்பிடிப்பர்.
 தங்களுடைய கருத்தைச் சுதந்திரமாகத் தெரிவித்ததற்காக மக்கள் கொல்லப்படுவதும், பத்திரிகையாளர்கள் சுடப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது. அப்படிப்பட்ட இந்தியாவில் வசிக்க நாங்கள்(காங்கிரஸ்) விரும்பவில்லை. இவற்றில் மாற்றம் கொண்டுவரவே நாங்கள் விரும்புகிறோம். அதுவே எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மிகப் பெரும் சவாலாக இருக்கப் போகிறது. இந்தியாவின் கலாசாரத்திலேயே சகிப்புத்தன்மை என்பது கலந்துள்ளது. அதை மீட்டெடுப்பதே தற்போதைய தேவையாக உள்ளது. மரபு அறிவியல் உள்ளிட்ட மருத்துவத் துறைகளில் இந்தியாவுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. 21-ஆம் நூற்றாண்டு மக்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்க உள்ளது.
 நாட்டில் பசிக்கொடுமை தலைவிரித்தாடும் நிலையில், விளையாட்டுத் துறைக்கு முன்னுரிமை அளிக்க முடியாது. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் போதிய நேரத்தில் கடன் பெற்று, பெரு நிறுவனங்களாக மாற நாட்டின் வங்கித் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். உலகப் பொருளாதாரத்தில், இந்திய விவசாயிகள் முக்கியப் பங்காற்றி வருவதால், விவசாயத் துறையில் பல்வேறு மாற்றங்களைப் புகுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
 ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாசார மற்றும் சமூகநலத் துறை அமைச்சரையும், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும், ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்த அவர் ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com