சுடச்சுட

  

  கடலில் விழுந்து நொறுங்கிய இந்தோனேசிய விமானத்தின் 2-வது கருப்பு பெட்டியும் கண்டுபிடிப்பு

  By DIN  |   Published on : 14th January 2019 02:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  indones


  ஜகார்த்தா: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் 2-வது கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி இந்தோனேஷியாவைச் சேர்ந்த லயன் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங்-737 மேக்ஸ் ரக விமானமொன்று தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்க்கா பெலிதுங் மாகாணத் தலைநகர் பங்கால் பினாங் நகர விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த விமானி பவ்ய சுனேஜா அந்த விமானத்தை ஓட்டிச் சென்றார்.

  விமானம் புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே, மீண்டும் விமான நிலையம் திரும்புவதற்கு விமானி சுனேஜா அனுமதி கேட்டார். எனினும், அடுத்த 10 நிமிடங்களில் ஜாவா கடற்பரப்பில் அந்த விமானம் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது.

  விமானத்தில் பயணித்த 181 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள், 2 விமானிகள் என 189 பேரும் உயிரிழந்தனர்.

  இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
   
  இந்த விமானத்தின் சேத பாகங்களை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒரு கருப்பு பெட்டி தேடும் பணி துவங்கிய சில நாட்களில் மீட்கப்பட்ட நிலையில், நீண்ட தேடுதல் பணிக்கு பின்னர் 2-வது கருப்பு பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து, இந்தோனேசிய கப்பற்படையின் மேற்குப் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் லெப்.கலோ.அகாங் நக்ரோஹோ தெரிவிக்கையில், தேடுதல் பணியில் பல்வேறு வகையான நவீன உயர் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் கடலின் 8 மீட்டர் ஆழ சேற்றில் குரல் பதிவுக் கருவி (கருப்பு பெட்டி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் முதன்மையான பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்தார். 

  விபத்து நேர்ந்த இடத்தில், உயிரிழந்தவர்களின் உடல்களையும், விமானத்தின் பாகங்களையும் தேடும் பணியில் ஏராளமான நீச்சல் வீரர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், சியாச்ருல் ஆன்டோ என்ற இந்தோனேசியா மீட்புப் படையைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai