சுடச்சுட

  
  rahul

  ஷார்ஜா மன்னர் சுல்தான் பின் முகமது அல் காசிமியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
   அவருடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் கலந்துரையாடினார். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, துபை, அபுதாபி ஆகிய நாடுகளின் மூத்த தலைவர்களை சந்தித்தார்.
   இந்நிலையில், ஷார்ஜா மன்னரை ஞாயிற்றுக்கிழமை அவர் சந்தித்தார்.
   இச்சந்திப்பு குறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், "ஷார்ஜா மன்னரை சந்தித்ததில் மகிழ்ச்சி. பல்வேறு விவகாரங்கள் குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினேன். ஷார்ஜாவுடன் இணைந்து செயல்படுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai