நேபாள நிலப்பரப்பை இந்தியா திருப்பி ஒப்படைக்க கோரிக்கை

ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியாவிடம் இழந்த டார்ஜீலிங் உள்ளிட்ட பகுதிகளை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று நேபாளத்தில் உள்ள ஒரு தன்னார்வ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியாவிடம் இழந்த டார்ஜீலிங் உள்ளிட்ட பகுதிகளை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று நேபாளத்தில் உள்ள ஒரு தன்னார்வ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
 இதுதொடர்பாக, நேபாளத்தில் இருந்து அரசு சார்பில் வெளியாகும் "தி ரைசிங் நேபாள்' என்ற நாளிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
 நேபாளத்தில் தேசிய ஒற்றுமை தினம், கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அன்றைய தினம், "கிரேட்டர் நேபாள் நேஷனலிஸ்ட் ஃப்ரண்ட்' என்ற தன்னார்வ அமைப்பு ஒரு கையெழுத்து பிரசாரத்தை தொடங்கியுள்ளது.
 அதில், நேபாளத்துக்கும் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில், இந்தியாவிடம் இழந்த பகுதிகளை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
 கடந்த 1815-ஆம் ஆண்டில் நடைபெற்ற அந்தப் போரின் முடிவில், நேபாளத்துக்குச் சொந்தமான டார்ஜீலிங், சிக்கிம், உத்தரகண்டில் உள்ள கர்வால், குமான் ஆகிய பகுதிகள் இந்தியாவிடம் விட்டுக் கொடுக்கப்பட்டன.
 இதுதொடர்பாக, கடந்த 1816-இல் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அந்தப் பகுதிகளை இந்திய அரசு திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, நேபாளத்திலும், வெளிநாடுகளிலும், வரும் ஏப்ரல் மாதம் வரை கையெழுத்து பெறப்படும்.
 அதன் பிறகு, அந்த கோரிக்கை கடிதம், நேபாள அதிபருக்கும், ஐ.நா. பொதுச் செயலருக்கும் அனுப்பி வைக்கப்படும்.
 இதேபோல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்கள், சார்க் அமைப்பின் செயலர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று அந்த பத்திரிகையில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com